இறைவர் : அருள்மிகு ஸ்ரீ ருத்திர கோட்டீஸ்வரர்
இறைவி : அருள்மிகு ஸ்ரீ அபிராம நாயகி அம்மன்
தல விருட்சம் : வில்வ விருட்சம்
தீர்த்தம் : ருத்திர கோடீ தீர்த்தம்
God : Arulmigu Sri Rudhrakotiswarar
Godess : Arulmigu Sri Rudhrakotiswari Amman
Tree : Vilva Tree
Theertham : Rudhrakodi Theertham
திருக்கழுக்குன்றம்(Thirukalukundram) நால்வரால் பாடல் பெற்ற தொண்டை மண்டல திருத்தலம். பக்திக்கு பக்தவச்சலேஸ்வரர்(Bakthavachaleswarar),சித்திக்கு ருத்திர கோட்டீஸ்வரர் (Rudrakoteswarar), முக்திக்கு வேதகிரீஸ்வரர் (Vedhagiriswarar). அருள்மிகு ருத்திர கோட்டீஸ்வரர் திருக்கோயில் (Rudrakoteswarar Temple,Thirukalukundram) ருத்திரர்கள் வழிபட்ட ஸ்தலம். ஒரு முறை உத்திரகோடி என உச்சரிக்க பலன் கோடியாய் பெருகும் ஸ்தலம். கோடி ருத்திரர்கள் தனித்தனியாக சிவலிங்கம் வைத்து வழிப்பட்ட தலம்.ஒருமுறை கோடிலிங்கமாக காட்சி தந்தமையால் இங்கு எழுந்தருளியுள்ள உருத்திர கோடீஸ்வரரை((Rudrakoteswarar) பாராயணம் செய்து ஆராதனை செய்ய பலன் கோடி கோடியாய் பெருகும் தலம்.இக்கோயில். சுமார் 2600 ஆண்டுகள் பழமையானது.சுவாமி சுயம்புவான ஸ்ரீ ருத்திர கோடீஸ்வரர். அம்பாள் ஸ்ரீ பெண்ணின் நல்லாள் என்கிற அபிராமி. சுவாமி சுயம்பு மூர்த்தி. காளி தேவியின் உக்கிரத்தை தனித்து சாந்தப்படுத்தியதால் அம்பாள் சற்று சாய்ந்து காட்சி கொடுக்கிறாள்.
தேவார பாடல் பெற்ற ஸ்தலங்களில் இத்தலம் தேவார வைப்புத்தலமாக திருநாவுக்கரசரால் பாடல் பெற்றது. பூலோக கைலாயம் என வழங்கும் இத்தலத்தில் இறைவன்(Rudrakoteswarar) சுயம்பு மூர்த்தி. சிவ நிந்தனை செய்த கருடனை நந்திதேவர் தன் மூச்சுக்காற்றால் பூமியில் புதைவடைய செய்த தலம்(Rudrakoteswarar Temple).ஸ்வர்ன பந்தனம் செய்யப்பட்ட திருக்கோயில்களில் இதுவும் ஒன்று.
காசி, தில்லை, திருவாரூர், திருவண்ணாமலை,காஞ்சி, காளஹஸ்தி மற்றும் மதுரை போன்ற திருக்கோயில்கள் இறைவனின் உடலாகவும் கோடி ருத்திரர் விரும்பி துதித்த இத்தலம் இறைவனின் இருதயமாகவும் விளங்குகிறது. ருத்திர கோட்டீஸ்வரரை வழிபட்டால் பலன் கோடியாக பெருகும் திருத்தலம். மூன்று பிரதோஷ காலங்களில் வழிபட்டால் பிள்ளை பேறு நல்கும் பெரும்பதி இது. “ருத்திர கோட்டீஸ்வரர்” என ஒரு முறை கூறும்போதே பாவம் விலகும், புன்னியம் உண்டாகும். நந்தி தேவர் தம் மணைவியோடு வீற்றிருக்கும் பதி. பிரதோஷ காலங்களில் இறைவனை திருநந்தி தேவரும் பெருஞ்சிறப்புடன் வழிபடும் தலம். சித்தர்கள் வழிபடும் பெருமை மிக்க தலம்.
ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதியான உருத்திரகோட்டீஸ்வரர் கோயில் திருக்கழுக்குன்றத்தில் உள்ள மிக பழமையான கோயில். உருத்திரகோட்டீஸ்வரா என்று ஒரு தரம் மகிழ்சியோடு இனிதாக கூறினால் நல்ல முறையில் கோடி பஞ்சாட்சர மந்திரம் கூறினால் கிடைக்கும் பலன் என்னவோ அது கிடைக்கும். இன்னும் மிகவும் மேன்மையான சிவபெருமானின் மந்திரங்களை இதனுடன் சேர்த்து உச்சரித்தால் அதன் பலன்களை கூற வார்தைகளே இல்லை.
செய்கின்ற தான தருமங்கள் எல்லாம் கோடியாக பெருகிபலன் தரும் இந்த ஆலயத்தின் பெருமைகளை அளப்பரியது. உருத்திர கோடீசா என ஒரு முறை கூறினால் பாவம் நீங்கும்.அவன் பாதம் கிடைக்கும் வேதம் விளங்கும் வேதனைகள் மறையும் திருத்தலமாக விளங்குகிறது. இங்கு நந்தி தேவருக்கென சிறப்பான தலமாக விளங்குவதும் நந்தியம் பெருமாள் தம் மனைவியுடன் வீற்றிருக்கும் தலமாக விளங்குகிறது. பிரதோஷ வழிபாட்டின் பலன் பல மடங்கு பெரியதாகும்.இங்கு நந்தி தேவருக்கு விசேஷ அலங்காரமும் சிறப்பு அபிஷேகமும் செய்யப்பட்டு வருகிறது.இதனையே திருநாவுக்கரசர் தன் ஷேத்திர கோவை திருத்தண்டகத்தில் கயிலாத நாதனை காணும் இடமாக “உஞ்சோனை மாகாளம் ஊறல் ஓத்துர் உருத்திர கோடி மறை காட்டுள்ளும் என இக்கோயிலை குறிப்பிடுகின்றார்.